தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
2000 களில் தன்னுடைய ரூட்டைக் கண்டுபிடித்து கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களாக நடித்துத் தள்ளினார். அதன் பயனாக இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கிறார். ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு அவரின் மாஸ் தற்போது உயர்ந்துள்ளது.
விஜய் சினிமாவில் தன்னுடைய உச்சத்தை இன்று தொட்டாலும் தன்னுடைய கல்லூரி கால நண்பர்களான ஸ்ரீநாத் மற்றும் சஞ்சீவ் ஆகியோரோடு இப்போதும் நெருக்கமான நட்பில் உள்ளார். தன்னுடைய நண்பன் சஞ்சீவ்வின் பெயர் போல இருக்க வேண்டும் என்றுதான் தன் மகனுக்கு சஞ்சய் என்றும் பெயர் வைத்தார். சஞ்சய் இன்று தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சீரியல்களில் விஜய்யின் மேனரிசங்களைக் காப்பியடித்து இவர் செய்யும் அலும்புதான் கொஞ்சம் தாங்க முடியாத ஒன்று.
இந்நிலையில் சஞ்சீவ்வின் மனைவி அளித்துள்ள ஒரு நேர்காணலில் விஜய்-சஞ்சீவ் நட்பின் நெருக்கத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் “விஜய் நண்பன் படம் நடித்த போது அதன் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லோரும் தங்களுடைய நண்பர்களை அழைத்து வரவேண்டும் என சொல்லி இருந்தார்கள். அப்போது விஜய், சஞ்சீவ்வை அழைத்தபோது அவர் திருமதி செல்வம் சீரியல் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் செல்ல முடியவில்லை. அதனால் விஜய் கோபித்துக் கொண்டு கிட்டத்தட்ட 6 மாதம் சஞ்சீவிடம் பேசவில்லை” எனக் கூறியுள்ளார்.