தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சின்னத்திரையிலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவருக்கு இந்திரஜா என்ற மகளும் உள்ளார்.
தனது தந்தையைப் போலவே இவரும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். விஜயுடன் இணைந்து நடித்த பிகில் திரைப்படம் இவருக்கு சிறப்பான என்ட்ரி ஆக அமைந்தது.
அப்படத்தில் கால் வந்து வீராங்கனையாக பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.
அப்படத்தில் அவரின் நடிப்பு அனைவரின் ரசிகர்களின் பாராட்டையும் அதிகமாக பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படத்திலும் அதிதி சங்கரின் தோழியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில் ரோபோ சங்கர் குண்டாக இருந்த நிலையில் தற்போது மிக மிக ஒல்லியாக மாறி உள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிகம் உடல் எடை குறைத்து மிக ஒல்லியாக மாறி வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அதே சமயம் அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருந்தாலும் ரோபோ சங்கர் தரப்பிலிருந்து இது குறித்து எந்த ஒரு விளக்கம் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.











