தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். இவர் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தமிழில் நேரம், காக்கா முட்டை, ஒரு நாள் கூத்து, கபாலி, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் ரமேஷ் திலக் நடித்தார். தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார்.
ஹீரோவாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி விஜய் சேதுபதி நடிப்பு மிரட்டலாக இருக்கும். இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரமேஷ் திலக்கும் விஜய் சேதுபதியும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது விஜய் சேதுபதி பற்றி ரமேஷ் சில கூறியதாவது, நான் ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றால் அது விஜய் சேதுபதி அண்ணாவால் தான்.
ஒரு கதாபாத்திரத்தை எப்படி ஏற்று நடிக்க வேண்டும். அந்த சூழ்நிலைக்கு அந்த கதாபாத்திரம் எப்படி அமைய வேண்டும் என்பதை தெளிவாக எடுத்து கூறுவார். ஒரு சிறிய கதாபாத்திரத்திற்கு கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க சொல்லுவார். நான் வேறு எங்காவது போய் நடித்தாலும் இது விஜய் சேதுபதி ஃபாலோ பண்ற ஸ்டைலாக இருக்கே என பலரும் கூறுவார்கள். அவரிடம் இருந்து வந்தது தான் இது. பொதுவாக நானும் விஜய் சேதுபதி அண்ணாவும் சேர்ந்து நடித்தால் நாங்கள் ஜாலியாக நடிப்பதாக சொல்லுவாங்க.
ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் அண்ணனுடன் நடிப்பதற்கு எனக்கு மிகவும் பயம். சீன் நடிக்கும் போது ஏதாவது தப்பு செய்துவிட்டால் அண்ணா திட்டி விடுவாரோ என நினைத்து பயப்படுவேன். அது வெளியே தெரியாது. நான் படங்களில் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி அண்ணா செல்போன் மூலம் எனக்கு தொடர்பு கொண்டு இந்த கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறாய். இதை இப்படி நடித்திருக்கலாம் என அக்கறையுடன் கூறுவார் என ரமேஷ் திலக் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.