சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

#image_title
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. இளையராஜாவுக்கும் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் இளையராஜா நூற்றுக் கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது. அவற்றி பல பாடல்கள் சூப்பர்ஹிட். அது மட்டுமில்லாமல் பல பாடல்களுக்கு அவரே பல்லவி சொல்லிவிட்டு, அதைத் தொடர்ந்து கவிஞர்களைப் பாட எழுத சொல்லிவிடுவார்.
அப்படிதான் ஆண்பாவம் படத்தில் இடம்பெற்ற வாலி எழுதி ‘காதல் கசக்குதய்யா’ பாடலிலும் சில வரிகளை எழுதிக் கொடுத்துள்ளார். இது பற்றி ஆண்பாவம் படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது “அந்த பாடலைக் கம்போஸ் செய்யும் போதே இளையராஜா வரிகளைப் போட்டு பாட ஆரம்பித்துவிட்டார்.
அவர் ஒரு வரியின் பாதியை சொல்லிவிட்டு அடுத்த பாதிக்கு யோசிக்கும்போது நான் எடுத்துக் கொடுப்பேன். வழக்கமாக இதுபோல எல்லாம் யாரும் அவரிடம் சொல்ல முடியாது. ஆனால் நான் சொன்ன வரிகள் பிடித்துப் போனதால் அவர் உற்சாகமாகிவிட்டார். இப்படி அந்த பாடலில் சில வரிகளை நான் சொல்லியுள்ளேன். எம்ஜிஆர், சிவாஜி, கிட்டப்பா மற்றும் பாகவதர் பற்றிய வரிகள் எல்லாம் நான் சொன்னதுதான்” எனக் கூறியுள்ளார்.