தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் மீது நடிகர் ரஜினிகாந்த் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் என்ற பெயருடன் வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஹிட்டு படங்களை கொடுத்திருக்கின்றார். அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் கூலி திரைப்படத்தை இயக்க இருக்கின்றார்.

தீனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மிக சுறுசுறுப்பாக அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். நல்ல கதைகளை கேட்டு ஒப்பந்தம் செய்து வருகின்றார். ஏற்கனவே டி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தின் சூட்டிங் முடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படம் என்கவுண்டரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது.

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் நடித்து வருகிறார் நடிகர் ரஜினி. இதற்கிடையில் ரஜினி கமிட்டான திரைப்படம் தான் தலைவர் 171. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்ததாக ஜூன் இரண்டாவது வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வரை இப்படத்தின் கதையை முழுமையாக எழுதி முடிக்கவில்லையாம். இதனால் நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் மீது சற்று கோபத்தில் இருக்கின்றார்.
