நடிகர் ராதாரவி 70களில் தொடங்கி 90கள் வரை மிரட்டலான வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். அவருடைய வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது ராதாரவி படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசன் பற்றி ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, நான் நடிகர் சங்க தலைவராக இருந்த போது ஒரு கூட்டத்திற்காக ரஜினி மற்றும் கமல்ஹாசனை அழைத்து வர இருந்தேன்.
கூட்டத்திற்கு அனைவரும் தயாராகி கொண்டிருந்தபோது அங்கிருந்த புரொடியூசர் அனைவரும் கமல்ஹாசனை திட்டிக் கொண்டிருந்தனர். ஏனென்றால் கமல்ஹாசன் கொடுத்த பேட்டியில், விஞ்ஞான வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது அதற்கான உரிமை யாருக்கும் கிடையாது என்று கூறி தனது பாணியில் சில தகவல்களை பேசி உள்ளார். இதைக் கண்டு கோபமடைந்த ப்ரொடியூசர் யாரைக் கேட்டு இவர் இப்படி பேசலாம் என்று அவர் மீது கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் அன்று சொன்னது இன்று நிஜம் ஆகிவிட்டது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. புதிதாக AI என்ற தொழில்நுட்ப வளர்ச்சி மூலமாக இறந்தவர்களை கூட உயிருடன் கொண்டு வந்து விடுகின்றனர். கோட் திரைப்படத்தில் கூட விஜயகாந்தை அற்புதமாக அப்படியே கொண்டு வந்திருந்தனர். என்னையெல்லாம் அப்படி AI மூலம் கொண்டுவர வேண்டாம். இறப்பதற்கு முன்பே நான் சில வீடியோக்களை எடுத்துக் கொடுத்து விட்டு செல்கிறேன் என காமெடியாக பேசினார்.
மேலும் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் இப்படி பேசும்போது கேமராக்கள் மூலம் நேரடியாக தான் படம் எடுக்க முடியும். சினிமாவில் விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கமல்ஹாசன் சொன்னதைப் போல விஞ்ஞான வளர்ச்சியை யாராலும் எப்போதும் தடுக்க முடியாது என்பதுதான் நிஜம் என ராதாரவி பேசியுள்ளார்.