எல்லாத்தையும் செக் பண்ணேன்.. ஆனா அதை மட்டும் விட்டுட்டேன்.. என் உடம்பு வீணா போனதுக்கு காரணமே அதுதான்.. மனம் திறந்து பேசிய பொன்னம்பலம்..!!

By admin on ஆனி 19, 2024

Spread the love

90’s காலகட்டத்தில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. முதலில் அவர் சண்டை கலைஞராகத்தான் இருந்தார்.

சிறுநீரக பிரச்சனைக்கு கூட இருந்தே குழி பறித்த நபர்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த பொன்னம்பலம் - Cinemapettai

   

ஆனால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், பெரிய மருது, நாட்டாமை, மாநகர காவல் என ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் பொன்னம்பலம் கடந்த ஆண்டு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

   

அண்ணன் கொடுத்த விஷத்தால் சிறுநீரகம் செயலிழந்தது - பொன்னம்பலம் அதிர்ச்சி தகவல் | Tamil cinema villain actor ponnambalam speech goes viral

 

சரத்குமார், கமலஹாசன், தனுஷ், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சிரஞ்சீவி அர்ஜுன், கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். அவரது சொந்த அக்கா மகன் தனது கிட்னியை கொடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினார். இது பற்றி பொன்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது சிறுநீரக பிரச்சனைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என வதந்திகள் கிளம்பியது.

மீடியா உலகத்திற்கு தான் அஜித், விஜய்.. சத்தமே இல்லாமல் பொன்னம்பலத்திற்கு 45 லட்சம் அள்ளிக் கொடுத்த நடிகர்.. வெளிவந்த தகவல் | Tamil360Newz

அது உண்மை இல்லை. அண்ணன் ஒருவர் எனக்கு ஸ்லோ பாய்சன் உணவில் கலந்து கொடுத்தார். நான் நம்பிக்கையாக இருந்தேன். அதன்பிறகு எனது அசிஸ்டன்ட்டை பிடித்து விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை பரிசோதனை செய்தேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நாட்கள் போக போக உடல் ரொம்ப சோர்வாக ஆனது. ஒரு கட்டத்தில் உடல்நலம் மோசமானது. அதன் பிறகு பரிசோதனை செய்து பார்த்த போது தான் கிட்னியில் பிரச்சனை இருப்பது உறுதியானது என கூறியுள்ளார்.