Connect with us

வறுமையில் வாடிய T.M.S-இன் வாழ்க்கையை முன்பே கணித்த நடிகர் பி.யூ.சின்னப்பா.. கணிப்பு நடந்ததா..?

CINEMA

வறுமையில் வாடிய T.M.S-இன் வாழ்க்கையை முன்பே கணித்த நடிகர் பி.யூ.சின்னப்பா.. கணிப்பு நடந்ததா..?

 

தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர், எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில், அந்த நடிகரே பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்த்தில் பாடும் திறன் பெற்றவர். அதேபோல் பாடல்களில் தனது தனித்திறமையின் மூலம் ஒருசில மாற்றங்களை செய்து அதில் வெற்றியும் கண்ட டி.எம்.சௌந்திரராஜன், தனது இளம் வயதில் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

#image_title

   

இந்தக் காலத்தில் தான் பல திறமையானவர்கள் வளர்ந்து கொண்டே இருப்பதால் போட்டி இருக்கும். ஆனால் டி.எம்.சௌந்திரராஜன் காலத்தில் போட்டிகள் குறைவாக இருந்தாலும், எடுத்த உடனேயே அவர்களுக்கு திரை வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. 23 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான டி.எம்.எஸ், குடும்ப வறுமை காரணமாக பி.யூ.சின்னப்பா நடிப்பில் சுதர்சன் என்ற படத்தை தயாரித்துக்கொண்டிருந்த ராயல் டாக்கீஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வீட்டிலேயே தங்கி வேலைப் பார்த்து வந்தார் டி.எம்.எஸ். அங்கு வரும் இசையமைப்பாளர்களுக்கு வேண்டிய தேவைகளை செய்துகொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருநாள், பி.யூ.சின்னப்பா, கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு ஆகியோர் அந்த வீட்டின் மாடியில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது டி.எம்.எஸ். கீழே ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்துள்ளார். இதை கேட்ட மாடியில் இருந்த ஒருவர் இவனுக்கு என்னாச்சு, பைத்தியம் மாதிரி கத்திக்கொண்டு இருக்கிறான் என்று கேட்டுள்ளார்.

#image_title

இதை கேட்ட பி.யூ சின்னப்பா அவன் கத்திக்கொண்டிருக்கவில்லை. அவன் பாடுவது நான் பாடிய பாட்டு. இன்னும் சொல்லப்போனால் என்னை விட சிறப்பாக பாடுகிறான். இப்படியே சாதகம் செய்தால், பெரிய பாடகனாக வருவான் என்று கூறியுள்ளார். பியூ சின்னப்பா சொன்ன நேரம், 1950-ம் ஆண்டு கருணாநிதி கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த மந்திர குமாரி என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான டி.எம்.எஸ்., அதன்பிறகு தனது கானக்குரலால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Archana
Continue Reading
To Top