தனது 43 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையான நடிகர் நரேன்!… குவியும் வாழ்த்துக்கள்!… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ!…

தனது 43 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையான நடிகர் நரேன்!… குவியும் வாழ்த்துக்கள்!… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ!…

நடிகர் நரேன் தனது 43 வயதில் பிறந்த இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் நரேன் ‘நிழல் கூத்து’ என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து இவர் நடித்து வெளியான              ‘4 தீ பீப்பிள்’ என்கிற திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது.

இவர் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அடுத்தடுத்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

குறிப்பாக நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம் அஞ்சாதே போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கியதால் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவ்வாறு தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் நரேன். இவர் 2007ல் மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2008 இல் தன்மையா என்கிற மகள் பிறந்தார்.

தன்மையா பிறந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் தற்பொழுது கர்ப்பமான நரேனின்  மனைவி அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் தனது 43 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையான நரேனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நரேன் தனது மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி உள்ளார். இதில் அவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Begam