90-களில் கலக்கிய நடிகர் லிவிங்ஸ்டனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

By Archana

Updated on:

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். திரைத்துறையில் காமெடியன், ஸ்க்ரீன் ரைட்டர், சப்போர்டிங் ஆக்டர் என பல துறைகளில் திறமை வாய்ந்த நபர்களில் நடிகர் லிவிங்ஸ்டனும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 1958 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பிறந்தார் நடிகர் லிவிங்ஸ்டன்.

   

இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார்.

அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்த இவர் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மற்றும் உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் தான் அதிகமாக நடித்துள்ளார்.

இவருக்கு என்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது.

இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன.

அவரின் மூத்த மகள் ஜோவிதா சீரியல்கள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது லிவிங்ஸ்டண் குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Archana