நம்ம லெஜண்ட் சரவணனா இது?… புது லுக்கில் செம ஹேண்ட்ஸம்மா இருக்காரே… புகைப்படம் உள்ளே…

நம்ம லெஜண்ட் சரவணனா இது?… புது லுக்கில் செம ஹேண்ட்ஸம்மா இருக்காரே… புகைப்படம் உள்ளே…

‘தி லெஜண்ட்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் சரவணன் அருள். வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நாயகிகளுடன் ஆட்டம் போட்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதையடுத்து சினிமாவில் நுழைய முடிவெடுத்த சரவணன், புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் முதல் படமான தி லெஜண்ட் படத்தில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளதையும் அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பிரபு, விஜயகுமார், விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்பொழுது தனது அடுத்த படத்திற்க்கான வேலைகளில் பிசியாக உள்ளார் லெஜண்ட். இந்நிலையில் அவரது புதிய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதில்அவர் கொஞ்சம் தாடி எல்லாம் வைத்து புதிய லுக்கில் செம மாஸாக  காணப்படுகிறார். இதோ அந்த புகைப்படம்…

Begam