CINEMA
விஜய் படத்தின் CD-ஐ உடைத்துப் போட்ட கவின்.. காரணம் என்னன்னு தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அவருக்குப் பின்னால் நடிக்க வந்த இளம் நடிகர்கள் பலரும் தற்போது அவரின் தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர். சில இளம் இயக்குனர்கள் கூட விஜயின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் காதல் திரைப்படங்களில் நடித்து பெண் ரசிகர்களை விஜய் வெகுவாக கவர்ந்தார். தன்னுடைய அசத்தலான நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ஆண் ரசிகர்களையும் கட்டி போட்டார். பூவே உனக்காக மற்றும் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. அதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இப்படி கோலிவுட் உச்ச நடிகராக இருக்கும் விஜய் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாராக உள்ளனர். ஆனால் விஜய் வினோத் படத்தில் முடித்துவிட்டு அரசியலுக்கு செல்ல உள்ளதாக கூறியுள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜயின் தீவிர ரசிகர்களில் நடிகர் கவினும் ஒருவர்.
இவர் விஜய் டிவி சீரியலில் நடித்து பிறகு சினிமாவில் நுழைந்தவர். லிஃப்ட் மற்றும் டாடா உள்ளிட்ட சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்போது பெக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வளரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் கவின் பற்றி விஜய் டிவி பிரபலமும் நடிகருமான ரியோ ஊடகம் ஒன்றில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.
ஆனால் வேறு மாநிலங்களில் படம் ரிலீஸ் ஆகிவிட்டதால் திருட்டு விசிடி மூலம் படம் வந்துடுச்சு. சரி நாங்க எல்லோரும் சேர்ந்து படம் பார்க்கலாம் என்று நினைத்து கவிநையும் அழைத்தோம். ஆனால் இப்படி படம் பார்ப்பது தவறு எனக்கு பிடிக்காது என்று சொல்லி அந்த சிடியை உடைத்துப் போட்டு விட்டான் கவின். அந்த அளவுக்கு சினிமா மேல் அவனுக்கு காதல் என்று ரியோ பகிர்ந்து உள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.