நடிகர் கமலஹாசன் தனது மகள் அக்ஷராவிற்கு கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு!…. என்ன தெரியுமா?… வைரலாகும் வீடியோ இதோ!…

By Begam

Published on:

நடிகர் கமலஹாசன் தனது இளைய மகள் அக்ஷரா ஹாசனுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்துள்ளார் இதனை அக்ஷரா ஹாசன் தனது instagram பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் நடிப்பில் உருவான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘விக்ரம்’. இத்திரைப்படம் மாபெரும் வெற்றியையும் வசூலில் சாதனையும் படைத்துள்ளது.

   

தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலஹாசன் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் கமலஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கிக் கொண்டு வருகிறார். நடிகர் கமலஹாசன் 1978ல் பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து கமலஹாசன் சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்பொழுது சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளனர். அக்ஷராவிற்கு நடிகர் கமலஹாசன் கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பரிசை பிரிக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் அக்ஷரா ஹாசன்.

இதோ இந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)