நம்ம ஜித்தன் ரமேஷா இது?… நீளமான முடி, தாடி எல்லாம் வைத்து ஆள் அடையாளமே தெரியலையே… நியூ லுக் புகைப்படம் உள்ளே…

By Begam

Published on:

இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர்.
நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரான இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை.

   

2011ல் வெளியான “ஓஸ்தி ” படத்திற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நடிகனின் வாக்கு மூலம் ” படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.

நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் 2” படமும் எதிர்பார்த்த அளவில் அளவிற்கு வெற்றியடையவில்லை. அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜித்தன் ரமேஷ் இன்னும் புகழ் பெற்றார். தற்போது ஜித்தன் ரமேஷ் “ரூட் நம்பர் 17” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக தென்காசி அருகில் ஒரு மிகப்பெரிய குகை நிலத்துக்கு அடியில் அமைத்து அங்கு ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள்.காற்றோட்டம் இல்லாத அந்த குகையில் 55 டிகிரி வெப்பநிலையில் தான் தொடர்ந்து 22 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர். அதில் ரிஸ்க் எடுத்து ஜித்தன் ரமேஷ் நடித்து கொடுத்திருக்கிறாராம். தற்பொழுது இத்திரைப்படத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.