இது ஜெயம் ரவி கேரியருக்கு நல்லதல்ல.. இப்படியே போனா யாரும் படத்தை கூட பார்க்க மாட்டாங்க.. உண்மையை உடைத்த பிரபலம்..!

By Nanthini on அக்டோபர் 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிறகு இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்ட அறிக்கையில், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும் அது என் ஒப்புதல் இல்லாமல் அவராக எடுத்தது என்றும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி, ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன், அவர் விவாகரத்து விஷயமே எனக்கு தெரியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

   

இதனைத் தொடர்ந்து ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார் எனவும் அவர் பாடகியை தாண்டி ஒரு சைக்காலஜிஸ்ட், அவர் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார், இருவரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்ப்ரிட்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம். அந்தப் பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ஈசிஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தன்னுடைய உடமைகளை ஒப்படைக்குமாறு அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் பூதகரமாக வெடித்துள்ள நிலையில் நேற்று ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

   

 

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தைப் பற்றி பலர் பேசி வருகிறார்கள். எனது மௌனம் பலவீனமோ, குற்ற உணர்வின் அடையாளமும் அல்ல என்பதை இங்கே வலியுறுத்துகிறேன். சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரம் குறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தகன், ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் என்பது பெரிய பூதகரமாக வெடித்துள்ளது. பொதுவாக சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அதையெல்லாம் வீட்டிற்கு வெளியே கொண்டு வராமல் முடிந்த அளவிற்கு வீட்டுக்குள்ளேயே பேசி முடித்து விடுகின்றனர்.

விவாகரத்து செய்து பிரிந்தவர்கள் கூட ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு அத்துடன் அந்த பிரச்சனையை முடித்து விடுகிறார்கள். ஆனால் முதல் முறையாக ஜெயம் ரவி விவகாரம் என்பது இந்த அளவிற்கு வெடித்துள்ளது. உண்மையிலேயே ஜெயம் ரவி பல துன்பங்களை அவரது மாமியார் வீட்டில் சந்தித்துள்ளார். வீட்டோட மாப்பிள்ளை என்றால் அப்படி ஒரு மரியாதை தான் கிடைக்கும். பல துன்பங்களை அனுபவித்த பிறகு தான் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இருந்தாலும் ஆர்த்தி பக்கம் உள்ள நியாயத்தையும் பார்க்க வேண்டும்.

மாமியாருக்கு அடிபணியாததால் ஜெயம் ரவி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதும் ஓரளவுக்கு உண்மைதான் என கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனை இப்படியே வளருவது நல்லதல்ல. இப்படியே சென்றால் ஜெயம் ரவி மீது ரசிகர்களுக்கு இருக்கும் மரியாதை குறைந்து இவர் பெண்களுக்கும் குடும்பத்துக்கும் மரியாதை கொடுக்காதவர்  என்று அவர் படங்களை பார்க்க விரும்ப மாட்டார்கள். இது அவருடைய கேரியருக்கு தான் ஆபத்து. மும்பையில் செட்டிலாக உள்ளதாக கூறப்படுவது உண்மை அல்ல. அவர் அப்படி சென்று விட்டால் தமிழ் சினிமாவில் அவருடைய மதிப்பு குறைந்துவிடும் என்று அந்தகண் பேசியுள்ளார்.

author avatar
Nanthini