அரசியல் வருகைக்கு அச்சாரமா..? “தாய்மொழி தெரியாதுன்னு சொல்றது பெருமையில்ல, அவமானம்…” மேடையில் கொந்தளித்த நடிகர் தனுஷ்…!

By Devi Ramu on ஆவணி 6, 2026

Spread the love

சென்னையில் தான் பயின்ற ‘தாய் சத்யா மெட்ரிகுலேஷன்’ பள்ளியின் புதிதாக சீரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தாய்மொழி குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். தான் படித்த காலத்தில் ஆங்கிலப் புலமை குறைவாக இருந்தாலும் தமிழ் மொழி மீது ஆழ்ந்த அறிவு இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்காலத்தில் தான் சந்திக்கும் பெரும்பான்மையான இளைஞர்களுக்குத் தமிழைப் படிக்கவோ எழுதவோ தெரியவில்லை என்று கவலை தெரிவித்தார். தாய்மொழி தெரியாது என்பதைப் பெருமையாகப் பேசுவது முற்றிலும் அவமானத்திற்குரிய விஷயம் என்றும், ஆங்கிலம் என்பது வெறும் கூடுதல் தகுதி மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தனது பழைய தமிழாசிரியருக்கு நன்றியைத் தெரிவித்த தனுஷ், அப்பள்ளியின் புதிய 3 தளக் கட்டிடத்தைச் சீரமைக்க நிதியுதவி செய்து உதவியுள்ளார். அவரது இந்த நற்செயலைப் பாராட்டி பள்ளி நிர்வாகம் அந்தப் புதிய கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ எனப் பெயரிட்டு கௌரவித்துள்ளது. பெல்ஜியம் படப்பிடிப்பின் போது கிடைத்த அனுபவங்களை மேற்கோள் காட்டி அவர் பேசிய இந்த உரை, தாய்மொழி குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. தனுஷ் அரசியலில் நுழையக்கூடும் என்ற தகவல்கள் உலா வரும் நிலையில், தாய்மொழி தொடர்பாக அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.