நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் ஜூன் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு கோலாகலமாக ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சி மூலமாக போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி ஐஸ்வர்யா அர்ஜுன் உடன் முதலில் நட்பாகப் பழகத் தொடங்கி பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலை ஏற்றுக் கொண்ட இரு வீட்டாரும் முதலில் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த ஜூன் 10ஆம் தேதி இருவருக்கும் மிகப் பிரம்மாண்டமாக அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதில் விஷால், சமுத்திரகனி, விஜயகுமார் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. ஏராளமான சினிமா பிரபலங்கள் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற நிலையில் நீல நிற கோட் அணிந்து மாப்பிள்ளை உமாபதி சூப்பராக இருந்தார்.
லைட் பிங்க் நிறத்திலான ட்ரான்ஸ்பரென்ட் சேரையில் மணமகள் ஐஸ்வர்யா ஜொலித்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
View this post on Instagram
இதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்,நடிகர் சிவகார்த்திகேயன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.