நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சுஜிதா…. எந்த படத்தில் தெரியுமா..??

நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சுஜிதா…. எந்த படத்தில் தெரியுமா..??

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் ஒருவர் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், குமரன், சுஜிதா, வெங்கட் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நடிகை சுஜித்ரா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தனம்  கதாபாத்திரத்தில் தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை சுஜிதா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு தங்கையும் அண்ணனும் உள்ளனர். இவர் முதன் முதலில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கை குழந்தையாக இவர் அறிமுகமானார்.

இதை தொடர்ந்த அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது வரை நடிகையாக ஜொலித்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை சுஜித்ரா ‘வாலி’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam