‘துணிவு’ பட லுக்கை மாற்றி செம்ம ஹேர் ஸ்டைல் உடன் வலம் வரும் நடிகர் அஜித்… சூப்பரா இருக்கீங்க சார்… வைரலாகும் புகைப்படம் இதோ….

By Begam

Published on:

நடிகர் அஜித் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி செம ஹான்ஸமாக வலம் வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இவர் நடிகை ஷாலினியை 2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இவர்கள் இருவரும் ‘அமர்க்களம்’ படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிப்பை விட்டு விட்டு தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.

இவர்களுக்கு அனுஷ்கா என்று ஒரு மகளும் ஆத்விக் என்ற ஒரு மகனும் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் இவர் நடிப்பில் வருடத்திற்க்கு ஒரு படமாவது வெளியாகி ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளது.  அந்த வகையில் தற்பொழுது பொங்கலுக்கு ரிலீசாக உள்ள படம் ‘துணிவு’.

இந்த வருடம் 2023 பொங்கலை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன .வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்ததனால் துணிவு திரைப்படம் வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்பொழுது நடிகர் அஜித் தனது ‘துணிவு’ பட லுக்கை மாற்றி சீரியல் நடிகை ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….