ஃபுட் பால் ஸ்டேடியத்தில் செம்ம ஸ்டைலாக… காலில் ஃபுட் பாலை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த நடிகர் அஜித் மகன் ஆத்விக்… இப்பயே இவ்ளோ ஸ்டைலா இருக்காரே…

ஃபுட் பால் ஸ்டேடியத்தில் செம்ம ஸ்டைலாக… காலில் ஃபுட் பாலை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த நடிகர் அஜித் மகன் ஆத்விக்… இப்பயே இவ்ளோ ஸ்டைலா இருக்காரே…

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது துணிவு  திரைப்படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக ‘ஏகே 62’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ்மேனி இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

நடிகர் அஜித் பற்றிய ஏதாவதொரு செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியானது என்றாலே ரசிகர்கள் மத்தியில் அது வைரல் ஆவது விளக்கம். இவர் அவ்வளவாக சமூக வலைத்தளங்களை  பயன்படுத்துவது கிடையாது. சமீபத்தில் இவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கினார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் ஓரிரு இரண்டு நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கானோர் ஃபாலோ பண்ண தொடங்கினர்.

இதன் மூலம் நடிகர் அஜித் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அடிக்கடி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ஷாலினியும் அவ்வப்பொழுது தனது கணவர் அஜித் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் தனது மகன் மகள் மற்றும் கணவரின் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர அது படுவைரல் ஆனது நடிகர். அஜித்தின் மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த புட்பால் மேட்சை காண நடிகை ஷாலினி தனது மகனை அழைத்து வந்த போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலானது.

இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி மகன் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் காலில் புட்பாலை வைத்துக் கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளா.ர் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

Begam