2 சூப்பர் ஹிட் திரைப்படங்களின் வாய்ப்பை தவறவிட்ட நடிகர் அப்பாஸ்.. இப்ப வருத்தப்பட்டு என்ன சார் பண்றது..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை பூர்விகமாகக் கொண்டவர். இவருடைய முழு பெயர் மிர்சா அப்பாஸ் அலி.

   

நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார். 1996ல்  வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படம் தான் இவரது சினிமா பயணத்தின் முதல் படி. முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கினார்.

இதை தொடர்ந்து அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார். காதல் தேசம் திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுக்கவே, நடிகர் அப்பாசுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. கிட்டத்தட்ட வரிசையாக ஒரு 18 திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் நடிகர் அப்பாஸ்.

அந்த சமயத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடிகர் அப்பாஸுக்கு கதை சொல்ல  போட்டியிட்டனர். அந்த கதை தனக்கு பிடித்திருந்தால் உடனே அப்பாஸ் படங்களில் கமிட்டாகி விடுவார். இந்த சமயத்தில் தான் இயக்குனர் சங்கர் ஜீன்ஸ் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். அப்பொழுது நடிகர் அப்பாஸ் பிரபலமாக இருந்ததால் அவரை கதாநாயகனாக வைத்து படம் எடுக்கலாம் என நினைத்தார் ஷங்கர்.

அவருக்கு அதிக படங்கள் நடிக்க இருந்ததால் இனி ஒரு புது படத்தில் கமிட்டாக முடியாது என்று கூறி மேனேஜர் அந்த படத்தை தவிர்த்து விட்டார். இதைத்தொடர்ந்து இயக்குனர் எழில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் கதையை எழுதி முடித்திருந்தார். அந்த கதையில் அப்பாஷை நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் அந்த படத்திலும் அப்பாஸ் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை .

இந்த இரண்டு திரைப்படங்களுமே அப்பொழுது சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் .அதற்கு பிறகு ஒரு சில ஆண்டுகளில் பட வாய்ப்புகளை இழந்தார் அப்பாஸ். அவர் மட்டும் இந்த இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார் ஒருவேளை இப்பொழுது கூட பிரபலமான ஹீரோவாக வலம் வந்து இருக்கலாம் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.