தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் ஆதி. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தமிழில் ஈரம், மரகத நாணயம், யாகாவாராயினும் நாவாக்க போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் இவர் சமீப காலமாக தமிழில் நடிப்பது கிடையாது. அதோடு இவர் தெலுங்கு மொழியில் தான் நடித்து வருகின்றார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்ட்னர். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கியிருந்த நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் சப்தம் என்ற திரைப்படத்தில் ஆதி நடித்துள்ளார். இப்படி சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆதி முதன் முதலில் மிருகம் என்ற தமிழ் திரைப்படம் மூலமாகத்தான் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அப்போது தொடங்கி இப்போது வரை பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே ஆதி தன்னுடன் மரகத நாணயம், சிவுடு என்ற தெலுங்கு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நிக்கி கல்யானியை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் ஆதி சமீபத்தில் அளித்த பேட்டியில், நானும் நிக்கி கல்ராணியும் நிச்சயமாகும் போது தான் எங்களுடைய காதலை அறிவித்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே சுமார் எட்டு வருடங்கள் யாருக்கும் தெரியாமல் டேட்டிங் செய்து கொண்டிருந்தோம். ஒரு நடிகர் நடிகையாக இருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் டேட்டிங் செய்வது என்பது ரொம்பவே கஷ்டமா இருந்தது. அப்போதும் எங்களுடைய குடும்ப நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி கலந்து கொண்ட போது எடுத்த ஒரு புகைப்படத்தை பார்த்து சோசியல் மீடியாக்களில் நிறைய எழுத ஆரம்பிச்சிட்டாங்க.
அதன் பிறகு தான் நாங்கள் எங்கள் காதலை அறிவித்து திருமணம் செய்து கொண்டோம். நான் மிருகம் திரைப்படத்தில் நடித்த அனுபவம் என்பது மறக்க முடியாதது. அருவம் மற்றும் மிருகம் படம் பண்ணும் போது எங்க பார்த்தாலும் பேண்டேஜ், டிஞ்சர் மற்றும் மருந்து என அதுவே தான் சுத்தி இருக்கும். மிருகம் படம் கத்தரி வெயில் காலத்தில் மதுரையில் எடுத்தாங்க. மதுரை மொழி கற்றுக்கொள்வதற்காக தினமும் சின்ன சின்ன பசங்க கூட பேசிக்கொண்டு அதையெல்லாம் ரெக்கார்டு போட்டு நைட்டு எல்லாம் கேட்டு தான் மதுரை மொழியை கத்துக்கிட்டேன்.
படம் எடுக்கும் போது ஒரு பாறையில் நான் படுத்துட்டு இருக்கணும். அந்த ஷாட் முடிஞ்சதுக்கு அப்புறம் எழுந்து பார்த்தால் உடம்புக்குள்ள அங்கங்க காயமா இருக்கும். படத்த பாத்து முடிச்சுட்டு எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே பாராட்டுனாங்க. ஆனா எங்க அம்மா மட்டும்தான் இது மாதிரி படத்தில் எல்லாம் நடிச்சா நீ நடிக்கவே வேண்டாம் என்று சொல்லி திட்டினார்கள். இது போன்ற அனுபவங்களை எல்லாம் மறக்கவே முடியாது என ஆதி பேசி உள்ளார்.