நடிகை நதியாவின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா?.. அழகான குடும்ப புகைப்படம் இதோ ….

நடிகை நதியாவின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா?.. அழகான குடும்ப புகைப்படம் இதோ ….

80s -ல் தொடங்கி 90s  வரை ரசிகர்களின் கனவு நாயகியாக  வலம் வந்தவர் நடிகை நதியா. இவர் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

1980-90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை நதியா.

இவர்  தனது சிறந்த நடிப்பு திறமையால் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில்  பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை ,

உயிரே  உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன் ,நிலவே மலரே,சின்னதம்பி பெரியதம்பி, தாமிரபரணி ,மங்கை ஒரு கங்கை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரின் இயல்பான  நடிப்பால்   தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவர் மிக பிரபலமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .

இவர் நடித்த காலத்தில் எந்த பொருளை எடுத்தாலும் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்தார்.

நதியா வளையல், நதியா புடவை ,நதியா கொலுசு, நதியா செருப்பு,என மிகவும் பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டார் .

இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

இவருக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர் .சில  ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம்  ரீ என்ட்ரி கொடுத்தார்.

சமூக வலைதளங்களில்   எப்போதும்  மிகவும் ஆக்டிவாக உள்ளவர் நடிகை  நதியா.

தற்போது இவரின்  குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin