“ஆத்தாடி ஆத்தாடி” பாடலுக்கு கியூட் ரியாக்ஷனுடன் அழகாக நடனமாடிய ரவீனா தாஹா.. வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..!

By Nanthini on செப்டம்பர் 29, 2024

Spread the love

ரவீனா தாஹா விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரவீனா நடித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியலில் ரவீனா நடித்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரவீனா பிரபலமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார்.

   

பூவே பூச்சூடவா சீரியலில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு கதை சொல்ல போகிறோம் திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் இணைந்து ஒரு படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க உள்ளார். கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார்.

   

 

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம். அதன்படி தற்போது தனுஷின் அனேகன் திரைப்படத்தில் வரும் ஆத்தாடி ஆத்தாடி பாடலுக்கு கியூட்டாக நடனமாடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/shorts/uvVtWs3ZD-o?feature=share
author avatar
Nanthini