மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி (NTPC), தற்போது உதவி நிர்வாக அதிகாரி (Assistant Executive) பணிக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 250 இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பொறியியல் (B.E/B.Tech) முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், 40 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்; இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. தகுதியுள்ளவர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் 55,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி (பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விலக்கு உண்டு), வருகிற மே மாதம் 7-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
