Connect with us

ரூ. 1000 இல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் வியாபாரம்… வளையல்கள் விற்பனையில் கலக்கும் வலையோசை அம்மாச்சி…

Startup

ரூ. 1000 இல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் வியாபாரம்… வளையல்கள் விற்பனையில் கலக்கும் வலையோசை அம்மாச்சி…

பெண்களுக்கு அழகு என்றாலே அது நகைகள் தான். கம்மல், பொட்டு, வளையல், கொலுசு என பெண்களை அழகுப்படுத்தி காட்டுவது இந்த பொருட்கள். தங்கத்தில் ஆனாலும் சரி வைரத்தில் ஆனாலும் சரி சாதாரண ஒரு கண்ணாடி வளையல்கள் ஆக இருந்தாலும் சரி பெண்கள் அழகு சாதன பொருட்களில் முக்கியமாக இவை கருதப்படுகிறது. அப்படி சென்னையில் கண்ணாடி வளையல்கள் விற்பனையில் இலட்சக்கணக்கில் செய்து வியாபாரம் செய்து கண்ணாடி வளையல் விற்பனையில் சாதித்து வருகிறார் 50 வயதான வலையோசை அம்மாச்சி எனப்படும் ராஜராஜேஸ்வரி.

   

வளையல்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் கண்ணாடி வளையல் என்றாலே கொள்ளை பிரியம் என்கிறார் அம்மாச்சி ராஜராஜேஸ்வரி. அப்படித்தான் சிறுவயதிலிருந்தே வளையல் மீது கொண்ட ஆர்வத்தினால் வளையல் வியாபாரம் ஆரம்பித்தோம். ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய கடையை தான் வைத்திருந்தோம்.

   

அப்போது சாதாரணமான வளையல்கள் தான் விற்பனை செய்து கொண்டிருந்தோம். பிறகுதான் வளையல்களில் பழைய டிசைன்களை இப்போதைய பெண்கள் விரும்பாததால் புது மாடல்களை எப்படி கொண்டு வரலாம் என்பதை யோசித்து ஒவ்வொரு ஊர்களில் இருந்து நாங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பித்தோம். அப்படி உருவானது தான் என்னுடைய இந்த பிரம்மாண்ட வளையல் கடை என்கிறார் வலையோசை அம்மாச்சி ராஜராஜேஸ்வரி.

 

எங்களிடம் 25 ரூபாய்க்கும் வளையல் இருக்கிறது. டஜன் 2000 ரூபாய்க்கும் வளையல் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது என்கிறார். இப்போது பெண்கள் மிகவும் விரும்பக்கூடிய மெட்டல் மாதிரியே பார்ப்பதற்கு இருக்கக்கூடிய கண்ணாடி வளையல்கள், ரெயின் டிராப் வளையல்கள் குஜராத்தி வளையல்கள் என பல வகைகளில் நாங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். பெண்கள் என்றாலே வளையல் அணிய வேண்டும். கண்ணாடி வளையல் நம் கைகளில் போட்டுக் கொண்டு அசைக்கும் போது அதிலிருந்து வரும் சத்தம் நம் கவலைகளை மறக்கச் செய்யும் என்கிறார் அம்மாச்சி ராஜராஜேஸ்வரி.

இது தவிர வெள்ளியிலான கண்ணாடி வளையல்களையும் விற்பனை செய்து வருகிறோம் என்று கூறுகிறார். அதாவது வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் போது அதிலிருந்து கழிவுகள் வரும் அந்த கழிவுகளை வைத்து வளையல்களுக்கு மேல் எனாமல் கொடுத்து செய்வார்கள். இந்த கண்ணாடி வளையல்கள் உடைந்து போனால் கூட கிலோ 4,000 ரூபாய்க்கு செல்லும் அந்த மாதிரி வளையல்கள் கூட விற்பனை செய்கிறோம். என்னிடம் பெண்கள் குழந்தைகள் ஆர்வமாக என் கையால் வந்து வளையல் வாங்கிட்டு செல்லனும்னு சொல்றாங்க. அது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

வெளிநாட்டில் இருந்து கூட ஆர்டர் கொடுக்கிறாங்க. எனக்கு இந்த ஆன்லைன் பத்தி எல்லாம் எதுவுமே எனக்கு தெரியாது. என்னோட பசங்க தான் youtubeல வீடியோ இன்ஸ்டாகிராமில் ரில்ஸ் எல்லாம் போட்டு இந்த மாதிரி ஆர்டர் எடுக்கிறது எல்லாம் பார்த்துக்கிறாங்க. என்னுடைய கணவர் வெளியூர்களுக்கு சென்று கண்ணாடி வளையல்களை வாங்கி வருவார். தினம் 2000 பாக்ஸுகளுக்கு மேல் வரும். அதில் 100 200 பாக்ஸ்கள் மட்டுமே மிஞ்சும். அந்த அளவுக்கு விற்பனை இருக்கிறது. தற்போது ஐயாயிரம் பத்தாயிரம் பாக்ஸ்களை நாள் ஒன்றுக்கு நாங்கள் இறக்குமதி செய்து கொண்டே இருக்கிறோம். கல்யாணம், சடங்கு, காதுகுத்து, வளைகாப்பு, கோவில் அம்மனுக்கு என எல்லா விஷேஷத்துக்கும் என்கிட்ட வந்து வளையல் வாங்கிட்டு போறாங்க என்கிறார் வலையோசை அம்மாச்சி ராஜராஜேஸ்வரி.

எந்த கலரில் வேண்டுமானாலும் எந்த டிசைனில் வேண்டுமானாலும் எங்களிடம் கண்ணாடி வளையல்கள் கிடைக்கும். நம் பாரம்பரியமான கண்ணாடி வளையல்களை விட்டுவிடக்கூடாது. அது தொடர்ந்து அடுத்த சந்ததியினருக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று கூறி சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்தி வளையல் விற்பனையில் ஆயிரம் ரூபாய்ல இருந்து தொடங்கி லட்சக்கணக்கில் வியாபாரம் செய்து சென்னையில் அசத்தி வருகிறார் வளையோசை அம்மாச்சி ராஜராஜேஸ்வரி.

Continue Reading
You may also like...

More in Startup

To Top