இந்து மத வழிபாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். ஒரு சில வழிபாட்டிற்கு பின்னல் அறிவியல் உண்மைகள் இருக்கும். நம் முன்னோர்கள் அறிவியலுடன் இணைந்து ஆன்மீகத்தையும் சேர்த்து மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடியை வைத்து இருப்தை பார்த்திருப்போம். துளசி செடி மிகவும் மருத்துவ குணம் கொண்டது. ஆனால் இந்த துளசி செடியை மாடமாக வைத்து அதை வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த துளசி செடியை வீட்டில் எப்படி வளர்ப்பது பராமரிப்பது வழிபாடு செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.

இந்து மதத்தில் மிக புனிதமாக பார்க்கப்படுவது துளசி. வீட்டில் துளசி செடியை வைத்து வளர்க்கும் போது அது எதிர்மறை ஆற்றலை அழித்து நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கிறது. மேலும் துளசி லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. ஆபத்து நேரங்களில் அருமருந்தாக துளசி இருக்கிறது. காய்ச்சல் ஜலதோஷம் இருமல் போன்ற எந்த உடல் உபாதை என்றாலும் பச்சையாக துளசியை இலையை எடுத்து லேசாக நீரில் கழுவி வாயில் போட்டு மென்றால் போதும். அதுவே அருமருந்தாகும். அப்பேர்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்டதுதான் துளசி.
வாஸ்துபடி வீட்டில் துளசியை வளர்க்க சரியான திசை வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் ஆகும். இது நீரின் திசையாக இருப்பதால் எதிர்மறை ஆற்றல்களை அழித்து நேர்மறை ஆற்றல்களை அதிகமாக தருகிறது. தென்கிழக்கு திசை நெருப்பின் திசையாக கருதப்படுவதால் இந்த திசையில் துளசி வைத்து வளர்க்கக்கூடாது என்பது நினைவில் கொள்ளுங்கள்.
அதுபோல துளசி இருக்கும் இடத்தை மிகவும் சுத்தமாக வைக்க வேண்டும் இல்லை என்றால் அது சரியாக வளராது பட்டுவிடும். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் துளசி செடியை தொடாமல் இருந்தால் மிகவும் நல்லது. துளசி மாடத்தை வைத்து துளசி செடியை லட்சுமியின் அம்சமாக நினைத்து வழிபட வேண்டும். துளசி செடிக்கு பாலாபிஷேகம் செய்வது சொர்ண ஆகர்ஷண சக்தியை கொடுக்கும். பொன் பொருள் சேருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். துளசி செடிக்கு செய்யும் அபிஷேகங்கள் மகாலட்சுமிக்கு செய்வதாக பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு தெய்வீக தன்மையை கொண்டது தான் இந்த துளசி செடி.

வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபடும் போது துளசி செடிக்கு மாலை 6 முதல் 7:00 மணிக்குள்ளாக அதன் மாடத்திற்கு அருகே சிறிய மண் விளக்கில் தினமும் அதற்கு தீபம் ஏற்றி சாம்பிராணி தூபம் காட்டி வழிபட்டால் நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அதேபோல் துளசி செடியை அடிக்கடி பறிப்பது கூடாது. ஒரு அளவுக்கு மேல் துளசி வளர்ந்து விட்டால் அதை அழகாக வெட்டிக் கொண்டே வரவேண்டும். அடுத்தவர்களை அடிக்கடி துளசி செடியை தொட விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
