ஆத்தி!!.. இவ்வளவா?…  ‘லவ் டுடே’ படத்தில் நடித்த நடிகை ராதிகாவுக்கு சம்பளம் இத்தனை லட்சமா?… வாயை பிளந்த ரசிகர்கள்….

ஆத்தி!!.. இவ்வளவா?…  ‘லவ் டுடே’ படத்தில் நடித்த நடிகை ராதிகாவுக்கு சம்பளம் இத்தனை லட்சமா?… வாயை பிளந்த ரசிகர்கள்….

லவ் டுடே திரைப்படத்தில் நடித்த ராதிகாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘லவ் டுடே’ திரைப்படம் கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இவர் தானே படத்தை இயக்கியும் அதில் நடிகராகவும் நடித்து அசத்தியுள்ளார்.  பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்னர் ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘லவ் டுடே’ திரைப்படத்தில் நடிகை இவானா ஜோடியாக நடித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை இவானாவும் நடிகர் பிரதீப் ரங்கநாதனும் முக்கிய பிரபலங்களாக மாறியுள்ளனர். 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் தற்போது வரை 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்க நாதனின் சம்பளம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதை தொடர்ந்து தற்பொழுது லவ் டுடே படத்திற்கு ராதிகா சரத்குமார் வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக நடிகை ராதிகா சரத்குமார் ரூபாய் 15 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.

Begam