வெளிநாட்டில்  தன் நண்பர்களுடன் சுற்றி திரியும் ‘ஆடுகளம்’ பட நடிகை…  வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Begam

Published on:

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘ஆடுகளம்’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி.

   

இந்த படம் வெற்றி அடைந்ததன் மூலம் நடிகை டாப்ஸி  தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்தார்.

இதை தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இதனை தொடர்ந்து தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஹாலிவுட்டில்  நடித்த பிங்க், ஷபானா போன்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இவரை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என  பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

ஆடுகளம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா’ ஆகிய சில தமிழ் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவான, ‘கேம் ஓவர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்று தந்தது.

பாலிவுட் திரையுலகத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த டாப்ஸி நீண்ட இடைவெளிக்கு பின், தமிழில் ‘ஜன கன மன’ என்கிற படத்தில் நடித்தார்.

தற்பொழுது இவர் கோலிவுட் , பாலிவுட் என பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  நடிகை டாப்சி.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும் உடற்பயிற்சி வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் தனது நண்பர்களுடன் வெளிநாட்டில் ஜாலியாக சுற்றி திரியும்  புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.