நடிகை சமந்தாவை போலவே திருமண கோலத்தில் ஜொலிக்கும் பெண்…. அப்படியே ஜெராக்ஸ் மாதிரி இருக்காங்களே…

நடிகை சமந்தாவை போலவே திருமண கோலத்தில் ஜொலிக்கும் பெண்…. அப்படியே ஜெராக்ஸ் மாதிரி இருக்காங்களே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  நடிகை சமந்தா.

இவர் அவ்வப்பொழுது தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளார். பொதுவாகவே ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போல வேடமிட்டு  புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் உடனே  வைரலாகி விடும்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை சமந்தா திருமண கோலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல ரசிகை ஒருவர் உடை அணிந்து புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலா ஜெராக்ஸ் போல இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நம்மை அசர வைத்த அந்த புகைப்படம்….

Begam