சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக வளம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படம் தான் அமரன். இப்படம் பெருமளவில் வசூலை கொடுத்தது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த மதராஸி திரைப்படத்தின் விழாவில் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தி பற்றி பேசிய விஷயம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எனக்கும் ஆர்த்திக்கும் திருமணம் ஆகும்போது நான் சினிமாவிற்கு வரவில்லை. அந்த நேரத்தில் நல்ல சம்பளம் கூட இல்லாமல் தான் இருந்தேன். இருப்பினும் என்னை எந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதற்காக நான் எப்பவுமே என் மனைவிக்காக நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
