“அந்த சிரிப்பை பாருங்க…” தூக்கி போட எப்படி மனசு வந்துச்சு…! உலகறியா வயதில் கைவிடப்பட்ட பிஞ்சு குழந்தை…. இணையத்தை உருக வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 3, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில், பிறந்த சில மாதங்களே ஆன கைக்குழந்தை ஒன்று பெற்றோரால் ஆதரவற்ற நிலையில் வீதியில் தவிக்கவிட்டுச் செல்லப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கே மக்கள் திரண்டு வந்தபோது, தன் தாய்-தந்தை தன்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர் என்பதைக் கூட அறியாத அந்தப் பிஞ்சு ஆச்சரியப்படும் வகையில் அனைவரையும் பார்த்து வெகுளித்தனமாகப் புன்னகைத்துள்ளது.

பூ போன்ற அழகான அந்த பெண் குழந்தையை இரக்கமின்றி வீதியில் போட்டுச் சென்ற பெற்றார்களின் கல்நெஞ்சமான செயலைக் கண்டு அப்பகுதி மக்களும் சமூக வலைதளவாசிகளும் கடும் ஆத்திரத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். தற்சமயம் அந்தப் பாப்பா பாதுகாப்பான நபர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, அவளுக்கு நல்லதொரு எதிர்கால வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.