“ராஜா மாதிரி வாழ்ந்த மனுஷன்… கடனை அடைக்க முடியலனு ரொம்ப ஃபீல் பண்ணாரு…! – பாரதிராஜாவின் உறவினர் சொன்ன அதிர்ச்சி உண்மை…!”

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். பல திறமையாளர்களைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்த அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. வத்தலகுண்டு அருகே உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது மகன் மனோஜின் மறைவிலிருந்து கடைசிவரை மீள முடியாமல் தவித்த பாரதிராஜாவை, கங்கை அமரன் உள்ளிட்ட நண்பர்கள் பழைய நிலைக்கு மீட்க முயன்றும் அவரது உடல்நிலை ஒத்துழைக்காமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாரதிராஜாவின் இறுதி காலத்தில் அவர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்ததாகவும், அவருக்குப் பல கோடிக் கடன் இருந்ததாகவும் தகவல்கள் பரவின. மேலும், அவரது மகள் மற்றும் மருமகளுக்கு இடையே சொத்து சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டது. இறுதிச்சடங்கின் போது கங்கை அமரன், பாரதிராஜாவின் மனைவியிடம் “எல்லோரும் அவரைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்கள்” எனக் கத்தியதும், பாரதிராஜாவின் மகள் ஜனனி, மனோஜின் மனைவியுடன் வாக்குவாதம் செய்ததும் இந்த வதந்திகள் மேலும் தீவிரமடையக் காரணமாயின.

   

இந்த வதந்திகள் குறித்து பாரதிராஜாவின் உறவினரும் இயக்குநருமான மனோஜ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், கங்கை அமரன் அவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுக் கூறியபோது அவரிடம் உண்மை நிலையை எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாரதிராஜாவின் இறுதி நாட்களில் கங்கை அமரன், ராதிகா உள்ளிட்டோர் நேரில் வந்து பார்த்தபோது குடும்பத்தினர் அனைவரும் அவருடன்தான் இருந்தனர் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எப்போதும் ராஜா போல வாழ்ந்த பாரதிராஜாவுக்கு, தனது கடன்களை அடைப்பதற்குத் தன்னை மீறி யாரும் ஒத்துழைக்கவில்லையோ என்ற ஒரு வருத்தம் மட்டுமே இருந்ததாக மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.