சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு நபரின் அசாத்திய துணிச்சல் மேலும் பல உயிர்கள் பலியாவதைத் தடுத்தது.
சிரிய வம்சாவளியைச் சேர்ந்த 43 வயதான அகமது அல் அகமது, உயிருக்கு அஞ்சாமல் பயங்கரவாதியுடன் போராடி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார். இவரது இந்தத் துரிதமான செயலால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் காப்பாற்றப்பட்டனர்.
அகமதுவின் வீரத்தைப் பாராட்டி, அவருக்கு நிதியுதவி செய்ய உலகம் முழுவதிலுமிருந்து 43,000-க்கும் மேற்பட்டோர் முன்வந்தனர். இதன் மூலம் சுமார் 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் நிதி திரட்டப்பட்டது.
திரட்டப்பட்ட நிதி, இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய்க்கான காசோலையாக அவரிடம் வழங்கப்பட்டது. ஒரு சாதாரண மனிதர் காட்டிய அபாரத் துணிச்சலுக்கு உலகமே ஒன்றிணைந்து வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.
