சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் உள்ள சஜா பஹாட் கிராமம் பல ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் தங்கள் கால்நடைகளின் தாகத்தைத் தணிக்க சிரமப்பட்டு வந்துள்ளர்கள். ஆனால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. இதனையடுத்து 1998-ல் 15 வயது சிறுவன் ஷ்யாம் லால் தனது மண்வெட்டியை எடுத்து ஒரு குளம் தோண்ட முடிவு செய்தார். சக கிராமவாசிகள் அவரைப் பார்த்து சிரித்துள்ளார்கள். ஆனால் அந்த பழங்குடி இளைஞன் உறுதியாக இருந்துள்ளார். தண்ணீருக்காக குளம் வெட்டப்போகிறேன் என்றார்.
அன்று அனைவருமே கிண்டலடித்துள்ளார்கள். ஆனால், யாருடைய உதவியும் இல்லாமலேயே சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு, சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் அந்த இளைஞர். மேலும் இன்று அந்த சுற்றுப்புற கிராமங்களின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் ஷியாம் லால். தற்போது 42 வயதுக்கும் அவர் கூறுகையில், எனது பணியில் யாரும் எனக்கு உதவவில்லை, நிர்வாகமோ அல்லது கிராம மக்களோ கூட இல்லை” என்று பெருமையுடன் கூறுகிறார், மேலும் தனது கிராமத்தின் மக்கள் மற்றும் கால்நடைகளின் நலனுக்காக அதைச் செய்ததாகவும் கூறினார்.
