இயக்குனர் வெற்றிமாறன் போலவே அச்சு அசலாய் இருக்கும் நபர்…  புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…

By Begam

Published on:

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இத்திரைப்படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய அடையாளமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

   

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தது. பல வெற்றி படங்களை திரையுலகத்திற்கு தந்த இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் நடிகர் சூரியை வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் சூரி முதன்முதலாக ஹீரோவாக திரையுலகில் அவதாரம் எடுத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளதாகவும்கூறப்படுகிறது .

விடுதலை திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் போலவே மேக்கப் போட்டுக் கொண்ட ரசிகர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரின் புகைப்படம்…