“அரசு ரயில்… எங்க வேணா உட்காருவேன்…” ரூல்ஸ் பாலோ பண்ணுங்க…! அபராதம் கட்ட மறுத்து வாக்குவாதம் செய்த பயணி… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

சாதாரண பயணச்சீட்டு வைத்திருந்த நபர் ஒருவர், ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டியின் மேல் படுக்கையில் படுத்துப் பயணித்துள்ளார். இதை கவனித்த ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர், அவரது டிக்கெட்டைச் சரிபார்த்துவிட்டு, விதிமுறைப்படி அபராதம் செலுத்துமாறு அல்லது உடனடியாக அந்தப் பெட்டியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அதற்கு ஒத்துழைக்காத அந்தப் பயணி, “இது அரசாங்க ரயில், காலியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் அமர்வேன்” எனக்கூறி அபராதம் செலுத்த மறுத்து TTE-உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சாதாரண டிக்கெட்டிற்கான தொகையை மட்டுமே தருவேன், அபராதம் தர முடியாது எனப் பயணி பிடிவாதம் பிடித்ததால் இருவருக்கும் இடையே மோதல் முற்றியது. நிலைமை கைமீறிச் சென்றதால், பாதுகாப்புப் படையினரை வரவழைக்கப் போவதாக TTE எச்சரித்தார். அரசுக் கட்டமைப்பு என்பதற்காக விதிமுறைகளை மீறிச் செயல்படக் கூடாது என்றும், ஜெனரல் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அதற்குரிய பெட்டியிலேயே பயணிக்க வேண்டும் என்றும் கூறி இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.