வரலாற்றிலேயே முதல்முறை… IAS அதிகாரிகளுக்குப் பதில் அமைச்சருக்குப் பொறுப்பு…. தமிழக அரசின் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அவர்கள் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக, இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளே நியமிக்கப்படும் இப்பொறுப்பிற்கு, வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அமைச்சரே நேரடியாக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போதைய உணவுத்துறை அமைச்சராக அவர் செயலாற்றி வருவதால், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பணிகளையும், கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கைகளையும் கூடுதல் சுமையின்றி ஒருங்கிணைத்து மேற்கொள்வதில் எவ்வித நிர்வாகச் சிக்கலும் இருக்காது என்ற அடிப்படையிலேயே தமிழக அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.