“பள்ளிகள் பூட்டப்படும் அவலம்…” கல்வி துறையை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா…? தமிழக கல்வி துறையை சீரமைக்க வல்லுநர்கள் கோரிக்கை…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை சரிந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 207 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலை உருவாகியுள்ளதால், வரவிருக்கும் தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை நியமிப்பதுடன், மாதிரிப் பள்ளிகள் என்ற பாகுபாடின்றி அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மேலும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை வழங்கப்படும் இலவச சீருடைத் திட்டத்தை பிளஸ் 2 வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் ஆசிரியர் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன. தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி உறைவிடப் பள்ளிகள் மற்றும் படைப்பாற்றல் பள்ளிகளைத் தொடங்குவதற்கான நிதி அறிவிப்புகளையும், வகுப்பறை ஆய்வகங்கள் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளையும் பட்ஜெட்டில் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இத்தகைய சீர்திருத்தங்களைச் மேற்கொள்வதன் மூலமே மூடப்பட்ட அரசுப் பள்ளிகளை மீண்டும் திறந்து, கல்வித் தரத்தை உயர்த்த முடியும் எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.