அதிர்ஷ்டம்னா இதுதான்…! வெறும் ரூ.180 கொடுத்து வாங்கிய லாட்டரி…. 16 ஆயிரம் கோடி பரிசு…! அமெரிக்காவில் நடந்த மெகா ஜாக்பாட்…!!

By Devi Ramu on மார்கழி 26, 2025

Spread the love

அதிர்ஷ்டம் கதவைத் தட்டினால் சாதாரண மனிதனும் ஒரே நாளில் கோடீஸ்வரராக முடியும் என்பதற்கு உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளார். வெறும் 2 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 180 ரூபாய்) கொடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு இந்த இமாலயத் தொகை அடித்துள்ளது. அர்கன்சாஸ் மாநிலத்தின் காபோட் நகரில் விற்பனையான இந்த டிக்கெட், அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரிசுத் தொகையை வென்ற சாதனையைப் படைத்துள்ளது.

இந்த ஜாக்பாட் பரிசை வென்ற வெற்றியாளர் யார் என்ற விவரம் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது; ஏனெனில் அங்குள்ள சட்டப்படி பெரிய தொகையை வெல்பவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க உரிமை உண்டு. ஒருவேளை பரிசு பெற்றவர் மொத்தப் பணத்தையும் ஒரே தவணையாகப் பெற விரும்பினால், வரிகள் போக சுமார் 7,000 கோடி ரூபாய் கைக்கு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.