கல்லூரி பேருந்தை பிடிக்க வேகமாக ஓடிவந்த மாணவர்… மின்னல் வேகத்தில் மோதிய அரசுப்பேருந்து… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

By Soundarya on ஆடி 5, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த சாலை விபத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது கல்லூரி பேருந்தை பிடிப்பதற்காக அவசர அவசரமாக சாலையை கடப்பதற்காக ஓடி வந்த மாணவர் ஒருவர் மீது அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து மோதியது. இதில் மாணவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் மாணவர் ஓடிக்கொண்டே சாலையை கடக்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.

அப்போது முன்னால் இருந்து வேகமாக வந்த அரசு பேருந்து அவர் மீது பலமாக மோதியதில் அவர் கீழே விழுகிறார். சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாணவரை மீட்டு அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.