திருமண வரன் தேடும் ஆண்களே உஷார்….!! திருமணமான பெண்ணை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பல்…. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

By Srimathi on புரட்டாதி 7, 2025

Spread the love

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜுனன், கருப்பட்டி வியாபாரி. இவரது மூத்த மகன் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்ய வரன் தேடி வந்துள்ளார். அப்பொழுது ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் பெண் புரோக்கர் மூலம் வரம் தேடலாம் என்று கூறினார். மேலும் சங்ககிரியை சேர்ந்த மணி என்பவரையும், அர்ஜுனனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் பெண் இருப்பதாக கூறி, அர்ஜுனன் மற்றும் பிரகாஷை திண்டல் முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த திருமணப் பெண் புரோக்கர் வள்ளி, பிரியதர்ஷினி என்ற பெண்ணை காட்டியுள்ளார். இதனை அடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 27ஆம் தேதி பிரகாஷ், பிரியதர்ஷினிக்கு திருமணம் நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து தங்களின் கமிஷன் தொகை ரூ. 1.80 லட்சத்தை பெற்றுக்கொண்டு, மணி & குமார் சென்று விட்டனர். இந்நிலையில் பிரகாஷ் மற்றும் அவர் குடும்பத்தினரிடம், பிரியதர்ஷினி சரிவர பேசாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த பிரகாஷ் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு திருமணமாகி 1 பெண் குழந்தை உள்ளதாக பிரியதர்ஷினி கூறியது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக புரோக்கர் மணியை தொடர்பு கொண்ட பொழுது, அவர் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அர்ஜுனன்.

   

அர்ஜுனன் கொடுத்த புகாரின் பெயரில், மணி, குமார், வள்ளி, சக்திவேல், செல்வி, மணப்பெண் பிரியதர்ஷினி ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ப்ரோக்கர் செல்வி, மணப்பெண் பிரியதர்ஷினி, மோசடிக்கு உதவிய பிரியா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மணி, குமார், சக்திவேல், வள்ளி ஆகியோர் தலைமறைவாகி விட்டதால், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.