“பூஜை பண்ணனும்… இதை வாங்கிட்டு வாங்க..” கணவரை வெளியே அனுப்பிய போலி சாமியார்… 2 பிள்ளைகளுடன் இருந்த மனைவியை பலாத்காரம் செய்த கும்பல்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தில், குடும்பத்தில் அமைதி நிலவவும் மனைவியின் உடல்நிலையைச் சீராக்கவும் கிரகசாந்தி பூஜை நடத்த முடிவெடுத்த தம்பதிக்கு எதிர்பாராத பேரதிர்ச்சி நேர்ந்துள்ளது. பூஜை நடத்துவதற்காகக் கணவன் அழைத்த பண்டிதர், தனது இரு கூட்டாளிகளுடன் வீட்டிற்கு வந்துள்ளார். பூஜைப் பொருட்கள் சில விடுபட்டுள்ளதாகக் கூறி கணவனைச் சந்தைக்கு அனுப்பி வைத்த அந்தப் போலி சாமியார்கள், வீட்டில் 27 வயது மனைவியும் இரு சிறிய குழந்தைகளும் மட்டுமே இருந்த சமயத்தைப் பயன்படுத்தி அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கணவன் வீட்டிற்குத் திரும்புவதற்குள் அந்த மூவரும் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாகக் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சில மணி நேரத்திலேயே அந்தப் பண்டிதர் மற்றும் அவரது இரு கூட்டாளிகளையும் அதிரடியாகக் கைது செய்தனர். ஆன்மீக நம்பிக்கையின் பெயரால் யாரையும் குருட்டுத்தனமாக நம்ப வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.