இப்படியும் நடக்குமா…? மீன்பிடி வலையில் எமன்…! துடிதுடித்து இறந்த மீனவர்… யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம்….!!

By Devi Ramu on மார்கழி 20, 2025

Spread the love

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற பாஸ்கரன் என்பவர், எதிர்பாராதவிதமாகத் தான் விரித்த வலையிலேயே சிக்கித் தண்ணீரில் மூழ்கினார். உயிருக்கு போராடிய அவரைத் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்டு, முதலுதவிக்காக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு உரியச் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனப் பாஸ்கரனின் உறவினர்கள் குற்றம்சாட்டியதுடன், மருத்துவமனை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்தப் பரபரப்பான சூழலில் மேல் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் செல்ல அரசு ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

   

வேறு வழியின்றி ஒரு காரின் மூலம் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாதனூர் அரசு மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் கொண்டு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக, நீண்ட தூரப் பயணத்தின் இடையில் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

உரிய நேரத்தில் தகுந்த மருத்துவ வசதிகளும், போக்குவரத்து உதவியும் கிடைக்காததே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் என உறவினர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அணைக்கட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மருத்துவமனைகளின் அலட்சியம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது