உடலுக்காக மட்டும் பல லட்சங்களை செலவு செய்யும் பிரபல நடிகை… dieticianக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு இத்தனை லட்சமா?… 

உடலுக்காக மட்டும் பல லட்சங்களை செலவு செய்யும் பிரபல நடிகை… dieticianக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு இத்தனை லட்சமா?… 

நடிகர் தனுஷ் நடித்த தேசிய விருது திரைப்படம், ‘ஆடுகளத்தில்’ வெள்ளாவி பெண்ணாக வந்து ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் ஒரே படத்தில், கவர்ந்திழுத்தவர் நடிகை டாப்ஸி. இந்த படத்தை தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா’ ஆகிய சில தமிழ் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்த துவங்கிய டாப்ஸி நடிப்பில், இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் தான், அஜித் நடிப்பில், ‘நேர்கொண்ட பார்வை’ என்கிற பெயரில் வெளியாகி, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அஜித் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் நடித்திருந்தார்.

டாப்ஸி ஏற்று நடித்த வேடத்தில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவான, ‘கேம் ஓவர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்று தந்தது.

மேலும் இவர் தற்பொழுது ஹிந்தியிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தற்போது இவர் கைவசம் சில தமிழ் படங்களும், பல ஹிந்தி படங்களும் வைத்து இருக்கிறார். தற்போது டாப்ஸி அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் தான் சினிமாவில் இருப்பதால் உடலை மெயின்டெய்ன் செய்ய அதிகம் செலவு செய்வதாக கூறி இருக்கிறார்.

தனது உணவை முடிவு செய்யும் dieticianக்கு மட்டும் மாதம் 1 லட்சம் ருபாய் செலவு செய்வதாக டாப்ஸி கூறி இருக்கிறார். ‘இந்த விஷயத்தை பற்றி வீட்டில் கூறினால் அப்பா என்னை அதிகம் திட்டுவார். இது வீண் செலவு என அவர் கூறுவார். இது வீண் செலவு இல்லை, அத்தியாவசியமான ஒன்று’ என டாப்ஸி குறிப்பிட்டுள்ளார்.

Begam