சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விளம்பர படத்தில் நடித்த பிரபல நடிகை!!… ஆள் அடையாளமே தெரியலையே!… புகைப்படம் இதோ….

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விளம்பர படத்தில் நடித்த பிரபல நடிகை!!… ஆள் அடையாளமே தெரியலையே!… புகைப்படம் இதோ….

நடிகை சமந்தா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விளம்பர படத்தில் விஜய் டிவி தொகுப்பாளினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், வெற்றியையும் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து சகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சமந்தா.

இவர் தற்பொழுது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் நடிகை சமந்தா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் நகைக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் சமந்தாவுடன் இணைந்த பிரபல விஜய் டிவி தொகுப்பாளர்களில் ஒருவரான ரம்யா இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

Begam