தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னாலே முதன்முதலாக தன்னுடன் நடித்த கதாநாயகியை திருமணம் செய்த நடிகரைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
அது வேறு யாருமில்லை பி.யு.சின்னப்பா. அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர்கள் பி.யு.சின்னப்பா, எம் கே தியாகராயன். இவர்களுடன் இணைந்து நடித்த கதாநாயகிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி தர வேண்டும் என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பி.யு.சின்னப்பாவிடம் கேட்டுள்ளார். அந்த கட்டுரையை எழுதி எடுத்துக்கொண்டு பி.யு.சின்னப்பா சென்னைக்கு வந்துள்ளார். அந்த பத்திரிகையாளர் வீட்டு வாசலில் கார் நின்றது. அதில் வந்தது பி.யு.சின்னப்பா.
மிகப்பெரிய ஸ்டார் தனது அலுவலகத்திற்கு வந்ததை நினைத்து பத்திரிகை ஆசிரியர் ஓடோடி வந்து பி.யு.சின்னப்பாவை பார்த்துள்ளார். உடனே பி.யு.சின்னப்பா தனது அருகில் அமர்ந்திருந்த நடிகையை காட்டி இது யார் என்று உங்களுக்கு தெரிகிறதா என ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அந்த ஆசிரியர் நல்ல தெரியும். இவர் சகுந்தலா தானே என கேட்டுள்ளார். உடனே பி.யு.சின்னப்பா, பிரிதிவிராஜ் என்ற படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்.
இவங்க ராணி சம்யுக்தியாக நடிக்கிறார்கள். பிரித்திவிராஜ் படத்தில் ராணி சம்யுக்தியை தேரில் கடத்தி கொண்டு கல்யாணம் செய்து கொள்வார் பிருதிவிராஜ். அதே மாதிரி அந்த படத்தின் கதாநாயகனாக நடித்த நான் காரில் இவர்களை கடத்தி வந்து கல்யாணம் செய்து விட்டேன் என்ற தகவலை பி.யு.சின்னப்பா அந்த பத்திரிகை ஆசிரியரிடம் கூறினார். அதனை கேட்டு பத்திரிகை ஆசிரியர் அதிர்ச்சியானார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.