“ரூ.7 கோடி வீடு இருக்கு… போலீஸுக்கு பணம் தருவேன்…” நாய் தகராறில் பணத் திமிரை காட்டிய நபர்…! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சாஸ்திரி நகரில், நாய் இறந்த விவகாரம் தொடர்பாக இரு அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதில் ஒரு பக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், எதிர் தரப்பினரை அநாகரிக வார்த்தைகளால் திட்டியதோடு, தன்னிடம் ரூ.7 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகப் பணத் திமிரைக் காட்டியுள்ளார். மேலும், காவல்துறைக்குக் லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சமயம் அந்த இளைஞரின் குடும்பத்துப் பெண்களும் சம்பவ இடத்திற்கு வந்து எதிர்த்தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வீடியோ எடுப்பதையும் தடுக்க முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கவிநகர் பகுதி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், விசாரணை முடிவில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.