ஷூவில் சீக்ரெட்’ கேமரா…! சிறுமிகள், பெண்களை ரகசிய வீடியோ எடுத்த காம கொடூரன்… குப்பை தொட்டி முதல் வீடு வரை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெர்க்லியில், காலணிகளில் மறைத்து வைக்கப்பட்ட சீக்ரெட் கேமராக்களைப் பயன்படுத்திப் பெண்களையும் சிறுமிகளையும் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓக்லாந்தைச் சேர்ந்த 35 வயதான நோவா ஸ்டெய்ன் என்ற நபர், பெர்க்லியில் உள்ள பிரபலமான உணவகம் மற்றும் கடைகளில் வரிசையில் நிற்கும் பெண்களின் ஆடைகளுக்கு அடியில் தனது காலணியில் பொருத்தியிருந்த ரகசிய கேமராவை வைத்துப் படம் பிடித்துவந்துள்ளார். கடந்த அக்டோபர் 26 அன்று, லாக்ஸ் ஸ்டாக் அண்ட் பேகல் உணவகத்தில் வரிசையில் நின்ற சிறுமி, எதிர்பாராதவிதமாக அந்த நபரின் காலை மிதித்தபோது, தன்னை நோக்கி கேமரா திருப்பப்பட்டிருப்பதைச் சந்தேகத்தின் அடிப்படையில் கவனித்து காவல்துறையிடம் புகார் அளித்தாள்.

சிறுமியின் புகாரைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த கூடுதல் தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் அக்டோபர் 30 அன்று நோவா ஸ்டெய்னைக் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அருகில் இருந்த குப்பைத் தொட்டிகளில் இருந்து மறைக்கப்பட்ட மினி கேமராக்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். டாக்கோ பெல் உணவகம் உள்ளிட்ட பல இடங்களில் கேமராக்களைப் பொருத்திப் பல வாரங்களாகப் பெண்களின் அந்தரங்கத்தைப் படம் பிடித்த அந்த நபரின் மீது பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.