மறைந்த பாடலாசிரியர் வாலியின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு…

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவர் பாடலாசிரியர் வாலி. இவரின் இயற்பெயர் டி எஸ் ரங்கராஜன். அக்டோபர் 29ஆம் தேதி 1931 ஆம் ஆண்டுபிறந்தார்.  திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் அப்பா சீனிவாசன் தாய் பொன்னம்மாள்.

   

இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை படித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு  சென்றார். 1958 ஆம் ஆண்டு வெளியான ‘அழகர்மலை கள்வன்’ என்ற படத்தில் பாடல் எழுதி பாடலாசிரியராக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து   நடிகர் எம் ஜி ராமச்சந்திரனுக்கு 63 படங்களிலும்,நடிகர் சிவாஜி கணேசனுக்கு 70  படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் சுமார் 15,000 மேற்பட்ட பாடல்களை  எழுதியுள்ளார்.

இவர் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.2000 ஆம் ஆண்டு தமிழக அரசால்  மகாகவி பாரதியார் விருது பெற்றார் அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதை பெற்றார் .

இவர் அம்மா,அவதார புருஷன்,நானும் இந்த நோற்றந்தும்,பாண்டவர் பூமி,ராமானுஜ காவியம்,கிருஷ்ண விஜயம்,தமிழ் கடவுள்.கலைஞர் காவியம்,கிருஷ்ண பக்தன்,வாலிப வாலி,பொய்க்கால் குதிரைகள்,நிஜ கோவிந்தம்,

அழகிய பாடகர்கள்,பெண்ணின் பெருந்தக்க யாவு ,பகவத் கீதை,நினைவு நடைகள் போன்ற  புத்தகங்களை எழுதியுள்ளார்.பாடலாசிரியர் வாலி ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

பாடல் ஆசிரியர் வாலி ரமணி திலகம் என்பவரை 1965 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.  இவரது மனைவி 2009 ஆம் ஆண்டு காலமானார்.

பாடலாசிரியர் வாலி சுவாசக் கோளாறு காரணமாக  அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி ஜூலை 18 ஆம் தேதி  2013ஆம் ஆண்டு காலமானார். தற்போது  இவரின் பலரும் பார்த்திடாத புகைப்படமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.